About Us

ஜம்பு மகரிஷி

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஜம்பு மகரிஷி கோத்திரத்தை சார்ந்த வன்னிய குலக்ஷத்ரியர்கள் மன்னர்களாகவும் தளபதிகளாகவும் தொன்றுதொட்டு விளங்கி மக்களைக் காத்தனர் பிற்காலத்தில் போர் இல்லாதகாலங்களில் பயிர்தொழிலில் ஈடுபட்டு மக்களின் பசியை போக்கினர் தற்காலத்தில் அரசியல்வாதிகள் அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் பொறியாளர்கள் என்றெல்லாம் சிறப்பாக விளங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே வணிகம் வன்னியர்களின் முதன்மையான தொழில் அல்ல.இருந்தாலும் வெகுசில வன்னியர்கள் வணிகத்திலும் ஈடுபட்டு நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்திவருகின்றனர்..சிலர் கல்வி நிறுவனங்கள் சிறுதொழில் நிறுவனங்கள் போன்றவற்றையும் நடத்திவருகின்றனர் பலர் மோட்டார் மெக்கானிக் எலெக்ட்ரிசியன் கட்டுமான தொழிலாளர்கள் சிறு விற்பனையாளர் போன்றவர்களாக உள்ளனர்.

இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கம் எல்லா ஊர்களிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வன்னியர்களைப் பற்றியும் அவர்கள் செய்யும் வர்த்தகம், தொழில், தயாரிப்புகள் சேவைகள் பற்றியும் இத்தளத்தில் பதிவு செய்து அனைவருக்கும் தெரிவித்து அவர்களின் சேவையை வன்னிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்த செய்வதே ஆகும் வன்னியர்கள் விவசாயிகளாக விளைவிக்கும் பொருட்களை யாரோ மொத்த வியாபாரியிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து அந்த வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் அத்தகைய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பற்றிய விவரங்களை இங்கு பதிவிட்டு அவர்களுக்கு உரிய விலை கிடைக்க உதவ வேண்டும் இதன் மூலம் வன்னியர்கள் அதிக அளவில் வணிகத்தில் ஈடுபட வழி வகுப்பதே ஆகும்.

*வணிகத்தின் முக்கியத்தை வன்னியர்கள் அனைவரும் உணர்ந்து வன்னியர்கள் நடத்தும் அனைத்து வர்த்தகங்களையும் ஆதரிக்க திரௌபதை அம்மன் அருள் புரிவாராக* 🙏🙏🙏.

திரௌபதி அம்மன்